AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சீசன் தொடங்கியும் சபரிமலையில் பாதிக்குப் பாதி குறைந்த பக்தர்கள் கூட்டம்!”.. ஆன்லைன் புக்கிங்கில் முறைகேடா?.. விசாரணைக்கு உத்தரவு!

Sabarimala mandala season devotee count drop: சபரிமலை மண்டல காலம் தொடங்கிய பிறகும் ஐயப்ப பக்தர்களின் வருகை பாதிக்குப் பாதியாகக் குறைந்ததால் தேவசம் போர்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. வெர்ச்சுவல் கியூ முன்பதிவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, உடனடி புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

“சீசன் தொடங்கியும் சபரிமலையில் பாதிக்குப் பாதி குறைந்த பக்தர்கள் கூட்டம்!”.. ஆன்லைன் புக்கிங்கில் முறைகேடா?.. விசாரணைக்கு உத்தரவு!
சபரிமலை கோவில்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Nov 2026 11:20 AM IST

கேரளா, நவ.20: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காகக் கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, கார்த்திகை 1-ஆம் தேதியான 17-ஆம் தேதியிலிருந்து மண்டல காலம் தொடங்கிய நிலையில், கடந்த நான்கு ஐந்து நாட்களாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு மொத்தம் 80,000 பக்தர்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்யலாம் என்ற அடிப்படையில், வெர்ச்சுவல் கியூ (Virtual Queue) முன்பதிவு மூலம் 66,000 பேரும், உடனடிப் பதிவு (Spot Booking) மூலம் 14,000 பேரும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதிக்குப் பாதி குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வருவது தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “109-லிருந்து 108 ஆகக் குறைந்த தவெக பலம்!”.. தமிழக சட்டப்பேரவையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்!

சென்னை, எர்ணாகுளம் ஏஜென்சிகள் மீது சந்தேகம்:

தரிசனத்திற்கான வெர்ச்சுவல் கியூ முன்பதிவுகள் நிரம்பியதாகக் காட்டப்பட்டாலும், அதற்கேற்ப பக்தர்கள் வராதது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் செயல்படும் சில ஏஜென்சிகள் வெர்ச்சுவல் கியூ முன்பதிவுகளைத் தாங்களே பதிவு செய்து, அவற்றை முறையற்ற வகையில் வேறு நபர்களுக்குக் கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் தேவசம் போர்டு மற்றும் காவல்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது.

விசாரணை உத்தரவும் பக்தர்கள் படும் சிரமமும்:

வெர்ச்சுவல் கியூ முன்பதிவுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக காட்டப்படுவதால், ஐயப்பனைத் தரிசனம் செய்ய விரும்பும் பல பக்தர்கள் முன்பதிவு கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஆன்லைன் புக்கிங்கில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தேவசம் அமைச்சர் மற்றும் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளனர். விசாரணை நிறைவடைந்த பிறகே, முன்பதிவு நடைமுறைகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் அதற்கான முழு விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு!”.. குவிந்த போலீசார்.. குவாரி விதிமீறல் வழக்கில் அதிரடி சோதனை!!

ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை:

மண்டல சீசன் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே பக்தர்களின் வருகை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்தும் தேவசம் போர்டு பரிசீலித்து வருகிறது. வெர்ச்சுவல் கியூ மூலம் தினமும் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழலில், அதைச் சமாளிக்கும் வகையில் உடனடிப் பதிவு (Spot Booking) முறையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமா என்பது குறித்தும் தேவசம் போர்டு அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us