கேம் சேஞ்சர்.. பிக் பாஸில் கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில் பிரித்வியை போட்டுத்தள்ளிய டிடிஃஎப் வாசன்! – ப்ரோமோ!
Bigg Boss 10 Promo: கோலிவுட் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்குக்கான வாரத்தில் உள்ளது. இந்நிலையில் கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில் டிடிஃஎப் வாசன், மொத்த ஆட்டத்தையே மாற்றியது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளாராக தொகுத்துவரும் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்ரம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வெறும் 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சி 11வது வாரத்தின் இறுதியில் இருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் முழுமையாக இந்நிகழ்ச்சியானது நிறைவடைந்துவிடும். அதன் காரணமா இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் (Ticket to Finale Task) விறுவிறுப்பாக நடக்கிறது.
இந்நிலையில் கான்ட்ராக்ட் கில்லாடி என்ற டாஸ்க் நடந்துவரும் நிலையில், அதில் போட்டியாளர்கள் தங்களின் கான்ட்ராக்டரை வைத்து மற்ற போட்டியாளர்களை கொள்ளவேண்டும். அந்த விதத்தில் பிருத்வி, டிடிஃஎப் வாசனை நியமித்த நிலையில், அவர் செய்த விஷயம் குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகாப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: ஜெயித்தாரா துல்கர்? ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!
பிருத்வியை போட்டுத்தள்ளி ஆட்டத்தை மாற்றிய டிடிஃஎப் வாசன்:
இந்த ப்ரோமோவில், பிருத்வி, டிடிஃஎப் வாசனிடம் , “சாதிகா அதிகப்படியான காயின்ஸ் வைத்திருக்கிறார். அவரை போட்டுத்தள்ளினால் நாம் முன்னேறலாம்” என்பதுபோல பேசியிருந்தார். அதனால் பிருத்வி வாசனை தனது கான்ட்ராக்ட் கில்லாடியாக நியமித்திருந்தார். இந்நிலையில் சுடும் அறைக்கு சென்ற டிடிஃஎப் வாசன், சாதிகாவை சுடாமல் தன்னை கான்ட்ராக்ட் கில்லாடியாக தேந்தெடுத்த பிருத்வியின் பொம்மையை நோக்கி சுட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு கனவு நனவானது போல… ரஜினியுடன் தர்மன் படத்தில் பணியாற்றுவது பற்றி பேசிய ஸ்ரீலீலா!
இந்நிலையில் இதை பார்த்த பிருத்வி மற்றும் மற்ற போட்டியாளர்கள் ஷாக்கில் இருக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவின் கீழ் ரசிகர்கள், டிடிஃஎப் வாசன் ஒரு ஆட்ட நாயகன் மற்றும் கேம் சேஞ்சர் என தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 75வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day75 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/R7u05LouRC
— Vijay Television (@vijaytelevision) November 20, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 75 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் இந்த நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அந்த வரிசையில் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக யார் முன்னேறுவர் என எதிர்பார்த்துவருகிறார்கள்.