AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

O.M: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!

Dhanushs O.M Movie Review: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்திலும் உருவாகிவந்த திரைப்படம்தான் ஓ.எம். இப்படம் இன்று (20/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், ஸ்பை திரில்லர் கதையில் அமைந்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

O.M: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!
ஓ.எம் திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Nov 2026 10:38 AM IST

அமரன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குநராக திகழ்ந்தவர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar periasamy). இவரின் முதல் படமாக ஏற்கனவே ரங்கூன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் 3வது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஓ.எம்: ஆப்ரேஷன் மோல் (O.M: Operation Mole Movie). இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மிக பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன், மம்முட்டி (Mammootty), சாய் பல்லவி (Sai Pallavi), இந்திரன்ஸ் (Indrans) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் மற்றும் ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இப்படமானது, இன்று 20/11/2026) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி காட்சிகள் முதல் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். அந்த விதத்தில் இப்படத்திற்கு எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: ‘செஃப் ஆக ஆசைப்பட்டேன்… ஒரு விபத்தைப் போல நடந்தது….’ – நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ்

தனுஷின் ஓ.எம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்:

இந்த ஓ.எம் திரைப்படமானது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஸ்பை திரில்லர் மற்றும் பிரம்மாண்டமான நடிகர்களுடன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் அதற்கேற்ற இடங்களில் வலுவாக காட்டப்பட்டுள்ளது. தனுஷின் கம்பேக் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.எம் திரைப்படத்தில் நடிகர்களில் நடிப்பு எப்படி இருக்கு:

இந்த ஓ.எம் திரைப்படத்தில் தனுஷ் சிறப்பான ஸ்பை கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. அவரும் அதற்காக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் வளர்ச்சி, மம்முட்டியின் கதாபாத்திரத்தின் இருப்பு என சிறப்பாக உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா தனுஷின் மனைவியாக சிறு கதாபாத்திரத்திலே நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயித்தாரா துல்கர்? ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

ஓ.எம் படத்தில் சாய் அப்யங்கரின் இசை எப்படி:

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவான 2வது படமாக ஓ.எம் அமைந்துள்ளது. இந்த படத்தில் பாடல்கள், பின்னணி இசை மற்றும் எமோஷனல் BGM என அவர் திரையரங்கையே தெறிக்கவிட்டார் என கூறலாம்.

தனுஷ், சாய் பல்லவி மற்றும் மம்முட்டி நடித்த ஓ.எம் படத்தை திரையரங்குகளில் என்று பார்க்கலாமா?:

இந்த ஓ.எம் படமானது இது வலுவான நடிப்பைக் கொண்ட, பார்க்கத் தகுந்த ஒரு ஸ்பை திரில்லர் திரைப்படம். இப்படத்தில் நடிப்பு, கதாபாத்திர முரண்பாடுகள் மற்றும் ஈர்க்கும் திரைக்கதை அமைந்துள்ளது. ஒரு கமர்ஷியல் மற்றும் ஸ்பை திரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக திரையரங்குகள் சென்று பார்க்கலாம்.

Follow Us