AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாய் பல்லவியிடம் முதன்முதலில் பேசியது அப்போதுதான் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன விசயம்

Director Rajkumar Periasamy talks about Sap Pallavi | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சாய் பல்லவி உடனான முதல் சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.

சாய் பல்லவியிடம் முதன்முதலில் பேசியது அப்போதுதான் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன விசயம்
ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2026 15:52 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periyasamy). இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நிலையில் பிறகு தமிழ் சினிமாவில் படங்களை இயக்கத் தொடங்கினார். தொடர்ந்து இயக்குநராக தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்ஹ்டில் தமிழ் சினிமாவில் வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தேசியவிருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் ஓ.எம் படத்தினை இயக்கி உள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சாய் பல்லவி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சாய் பல்லவியிடம் முதன்முதலில் பேசியது அப்போதுதான்:

ராமாயணம் பட விளம்பர நிகழ்வுகளின் போது, ​​சாய் பல்லவி ஒரு பாடலைப் பாடினார். அதைக் கேட்டுவிட்டு, அவர் ஒரு சிறந்த பாடகி என்று அனைவரும் பேசத் தொடங்கினர். ஆனால், நாங்கள் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது, ​​பாடகர்கள் நடனமாடவும், நடனக் கலைஞர்கள் பாடவும் வேண்டிய ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் சாய் பல்லவி காக்க காக்க திரைப்படத்திலிருந்து என்னை கொஞ்சம் மாற்றி என்ற பாடலைப் பாடினார். அப்போதுதான் நான் முதன்முதலில் அவரிடம் பேசினேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் வைபவ் நடிப்பில் வெளியானது மணிகண்டா படத்தின் டீசர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பா.ரஞ்சித்தின் அந்தப் படத்தில் எனது ரோலில் முதலில் தேர்வானது அசோக் செல்வன் தான் – கலையரசன் சொன்ன சுவாரஸ்யமான விசயம்

Follow Us