AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

Director Rajkumar Periasamy received National Film Award | தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அமரன். இந்தப் படத்திற்காக தற்போது தேசிய விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

அமரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்ற ராஜ்குமார் பெரியசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2026 19:27 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபபத்திர வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல் வெளியாகியும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. ஓம் படத்தில் பிசியாக இருக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாகவும் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது அமரன் படம். இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதினை தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றுக் கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… பெண்களுக்கு தற்காப்புகலை ரொம்ப முக்கியம்… விஸ்மயா மோகன்லாலின் துடக்கம் படத்தின் ஓடிடி விமர்சனம் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 22 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் இணைகிறதா சூர்யா மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணி?

Follow Us