AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – வாழ்த்து தெரிவித்த சாய் பல்லவி!

Sai Pallavi congratulated director Rajkumar Periasamy | தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற அமரன் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விருது வென்றதற்கு சாய் பல்லவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – வாழ்த்து தெரிவித்த சாய் பல்லவி!
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2026 12:44 PM IST

இந்திய அளவில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 72-வது தேதிய திரைப்பட விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த அளவில் பலப் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமா படங்கள் மற்றும் பிரபலங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் அந்தப் படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு மற்ற திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி விருது வென்றுள்ள நிலையில் நடிகை சாய் பல்லவி வாழ்த்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்ரை வெளியிட்டுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி குறித்து நெகிழ்ந்து பேசிய சாய் பல்லவி:

அந்தப் பதிவில் சாய் பல்லவி கூறியதாவது, என் மனம் நெகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. இது எளிதான பயணம் அல்ல; நீங்கள் சொல்ல விரும்பிய கதைக்காக, மிகுந்த மன உறுதியுடனும் மரியாதையுடனும் அனைத்தையும் கையாண்டீர்கள்! இதை எழுதும்போதே நான் உணர்ச்சிவசப்படுகிறேன்; இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் தருணம் வரை உங்கள் முழுப் பயணத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன்! அன்பிற்குரிய ராஜ்குமார் சார், உங்களை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். உங்கள் வெற்றியை நான் என்னுடைய வெற்றியாகவே கொண்டாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Jana Nayagan: இன்னும் 3 நாட்களில்… புது போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!

நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ராமாயணா பட டிரெய்லரைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன் – இயக்குநர் அட்லி

Follow Us