தேசிய விருது பெற்றவர்களை கொண்டாடிய ஓம் படக்குழுவினர் – வைரலாகும் போஸ்ட்
OM movie team celebrates National Film Award Winners | இந்திய சினிமாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 72-வது தேசிய விருதிற்கான அறிவிப்புகள் வெளியானது. இதில் இந்திய மொழிகளில் பலப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஓம் படக்குழுவில் உள்ள 4 பேர் அந்த தேதிய விருதை வென்றதை படக்குழு கொண்டாடி வருகின்றது.
இந்திய முழுவதும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சினிமாவிற்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய முழுவதும் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரது கையால் விருதுகளை வழங்கி கௌரவிப்பார். இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே சில சலசலப்புகள் நிலவி வந்தாலும் விருது வென்றவர்களை தொடர்ந்து பாராட்டியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வரும் ஓம் படத்தின் படக்குழுவில் உள்ள 4 பேர் 72-வது தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளனர். அவர்களை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தேசிய விருது பெற்றவர்களை கொண்டாடிய ஓம் படக்குழுவினர்:
ராயன் திரைப்படத்திற்காக சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தேசிய விருதை தனுஷ் வென்றார். மேலும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அவரது நடிப்புக்காக சிறப்பு அங்கீகாரம் (Special Mention) பெற்றார். மலையாளத் திரைப்படமான பிரமயுகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்மூட்டி வென்றார். அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வென்றார். அமரன் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதை கலைவாணன் வென்றார். இவர்கள் 4 பேரையும் படக்குழு வாழ்த்தி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read… Varanasi: பிரியங்கா சோப்ரா பர்த்டே.. வாரணாசி பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி!
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Dhanush won the National Award for Best Feature Film (Raayan) and received a Special Mention for his performance in Captain Miller.#RajkumarPeriyasamy won the National Award for Best Director (Amaran).
Kalaivanan won the National Award for Best Editor (Amaran).#Mammootty… pic.twitter.com/YgohKDDaRe
— Movies Singapore (@MoviesSingapore) July 19, 2026
Also Read… நோ சொன்ன ருக்மிணி வசந்த்.. தனுஷின் டி56 படத்தில் இணையும் இளம் நடிகை .. யார் தெரியுமா?