AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அரசன் படக்குழு… தற்போதைய நிலை என்ன?

Arasan Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அரசன் படக்குழு… தற்போதைய நிலை என்ன?
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jul 2026 11:13 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகம் ஆகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். ஒரு நடிகர் படங்களில் நடித்தால் தான் அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவார். ஆனால் நடிகர் சிலம்பரசன் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அவரை எப்போது விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மற்ற பிரபலங்களும் பல இடங்களில் வெளிப்படையாக பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி உண்மையான பல ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களாக ஒரு மாஸான கம்பேக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடன் எடையை குறைத்து மீண்டும் ஹிட் படங்களைக் கொடுக்கும் நாயகனாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன?

அதன்படி தற்போது வெளியான தகவலின்படி அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை மூன்று கட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், தற்போது ஒரு சிறிய இடைவேளையில் உள்ளது. இன்னும் சுமார் 60 நாட்களுக்கான படப்பிடிப்பு எஞ்சியுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் டிஆர் மூன்று விதமான தோற்றங்களில் காணப்படுவார். வரவிருக்கும் படப்பிடிப்பு கட்டத்தில் அவர் இளமையான தோற்றத்தில் தோன்றுவார். அடுத்தகட்டப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, அவர் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும் ஒரு முக்கிய சிறப்புத் தோற்றத்தில் (extended cameo) காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jana Nayagan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS காட்சிகள் எப்போது? முழு விவரங்கள் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்

Follow Us