AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்

Actor Sivakarthikeyan Movie | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது சேயோன் படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை அவரே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 16:23 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது. மேலும் வசூலிலும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காதது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்தார்.

சிவக்குமார் முருகேசன் முன்னதாக சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷனில் தாய் கிழவி என்ற படத்தை இயக்கி இருந்தார். அது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக கமல் ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கி வருகிறார். சேயோன் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார்:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக 27-வது படமாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 27-வது படத்தை இயக்குநர் அருண் பிரபு இயக்க உள்ளதாகவும் இவர் முன்னதாக அருவி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பட்டாம்பூச்சி பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடிய மமிதா பைஜூ – வைரலாகும் வீடியோ

Follow Us