AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

Actor Dhanush Next Movie Actress Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தனுஷின் அடுத்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jul 2026 19:37 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பல விருதுகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் கர. ஆக்‌ஷன் த்ரில்லார் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அதன்படி நடிகர் தனுஷ் தற்போது ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் முழுவதுமாக முடிவடைய உள்ளது. மேலும் இந்தப் படம் இந்த ஆண்டில் இருதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தனுஷ் 56 படத்தின் நாயகி இவரா?

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 56-வது படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து எழுதி இயக்க உள்ள நிலையில் படத்தில் நாயகியாக யார் நடிப்பார் என்று தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி முன்னதாக நடிகைகள் சஞ்சனா மற்றும் மமிதா பைஜுவின் பெயர்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை பிரீத்தி முகுந்தின் பெயர் அடிபட்டு வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… தியேட்டரில் க்ளாப்ஸ்களை அள்ளிய காட்சியை வெளியிட்டுள்ளது இதயம் முரளி படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம்? – ஹீரோ இவரா?

Follow Us