AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தியேட்டரில் க்ளாப்ஸ்களை அள்ளிய காட்சியை வெளியிட்டுள்ளது இதயம் முரளி படக்குழு

Idhayam Murali Movie Team Released Sneak Peek Video | தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தியேட்டரில் க்ளாப்ஸ்களை அள்ளிய காட்சியை வெளியிட்டுள்ளது இதயம் முரளி படக்குழு
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jul 2026 19:50 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள இதயம் முரளி படமும் தற்போது இடம் பெற்றுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது இதயம் முரளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பசில், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நடராஜன், தமன், சுதாகர், ட்ராவிட், ரக்‌ஷன், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், யஷஸ்ரீ மற்றும் ஜோனிதா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டது இதயம் முரளி படக்குழு:

இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்கள் மிகவும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதயம் முரளி படத்தில் தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் வரும் காட்சி ஒன்றை ரீ கிரியேட் செய்துள்ளனர். அந்த காட்சியில் நடிகர் சுதாகர் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டகளை வெகுவாகப் பெற்றார். இந்த காட்சியை தற்போது இதயம் முரளி படக்குழு ஸ்னீக் பீக் காட்சியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Train Movie: ஆக்ஷன் திரில்லர் பாணியில்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Basil Joseph: அதற்காகவே ஜன நாயகன் படத்தை பார்ப்பேன் – நடிகர் பேசில் ஜோசப் பேச்சு!

Follow Us