பிரபல பாடகி எஸ்.ஜானகி மரணம் – சோகத்தில் ரசிகர்கள்
பிரபல பாடகி எஸ்.ஜானகி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மரணத்துக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவால் டோலிவுட் திரையுலகம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
பிரபல பாடகி எஸ்.ஜானகி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மரணத்துக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவால் டோலிவுட் திரையுலகம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
பிரபல பாடகி எஸ்.ஜானகி மரணம்
எந்தவொரு சூழலுக்கும் ஏற்ற உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்த குரல் வளம் கொண்டவர் எஸ். ஜானகி. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அவர் பாடியிருக்கிறார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறையும், பல்வேறு மாநில அரசுகளிடமிருந்து 31 விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
தமிழில் இளையராஜா இசையில் செந்தூரப் பூவே, இஞ்சி இடுப்பழகி, தென்றல் வந்து, நிலா காயும் மற்றும் அடுக்கு மல்லி போன்ற காலத்தில் அழியாத பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ரஹ்மான் இசையில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ, நெஞ்சினிலே, மார்கழி திங்கள் மற்றும் காதல் கடிதம் தீட்டவே போன்ற பாடல்களை பாடி அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பமான பாடகியாக இருந்து வருகிறார்.
கடந்த 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தவர் எஸ்.ஜானகி. தமிழில் கடந்த 1957 ஆம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது 19-வது வயதில் பின்னணிப் பாடகியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். பல தலைமுறைகளைத் தாண்டி நடிகைகளின் குரலாக இருந்து வந்திருக்கிறார். தமிழில் இவர் ஆற்றிய பங்கிற்காக தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் மைசூர் பல்கைலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் பாடல் பாடுவதில் இருந்து ஓய்வை அறிவித்தார். தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதில் தனது தீவிர நடிகையான திரிஷாவிற்கு பாடல் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சியில் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம் பெறாத நிலையில் பின்னர் யூடியூபில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு இந்திய இசைத்துறைக்கு நேர்ந்த மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது.