உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், வரதட்சணை வாங்க மறுத்த மணமகனின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக, மணமகள் குடும்பத்தினர் பாரம்பரிய வழக்கப்படி, மணமகனுக்கு 31 லட்சம் ரொக்கப் பணத்தை வழங்க முயன்றனர். ஆனால், விகாஸ் என்ற மணமகனும், அவரது குடும்பத்தினரும் அந்தப் பணத்தை வாங்க மறுத்து, உடனடியாக திருப்பி அளித்தனர்.