AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்

கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐயிடம் புகார் மனு அளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்
முதல்வர் விஜய் - ஆர்.எஸ்.பாரதி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jul 2026 23:07 PM IST

கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.41 பேர் மரணத்துக்கு திமுகவும் காவல்துறையும் காரணம் என முதல்வர் விஜய் பேசியிருந்தார்.இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில் முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவ செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்

கரூரில் பாதக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு அரசு பணி வழங்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். நிகழ்சவில் பேசிய அவர்,  ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில வழிகளையும் காயங்களையும் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வலியையும் காயத்தையும் தந்தது இந்த கரூர் சம்பவம்தான் என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், மக்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைப் பேசுவதற்காக திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் எனப் பயணம் செய்தோம். அரியலூர் கூட்டம் முடிந்து பெரம்பலூர் செல்லும் போது, அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதாகப் பெரம்பலூர் போலீசார் எங்களை எச்சரித்தனர். மக்களின் பாதுகாப்பைக் கருதி நாங்கள் அங்கு செல்லாமல் திரும்பி, மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம் என்றார்.

ஆனால், நாமக்கல் முடித்து கரூர் வந்தபோது இங்கிருந்த போலீசார் எங்களை ஏன் எச்சரிக்கவில்லை? கூட்டம் கட்டுப்பாட்டை மீறுகிறது என்று தெரிந்தால் கூட்டத்தை ரத்து செய்ய போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைச் செய்யாமல், நெடுஞ்சாலையில்  இருந்த அந்தப் பகுதிக்கு எங்களை போலீசாரே முன்னின்று கூட்டிச் சென்றார்கள். அதன் பின்னணியில் ஒரு பெரிய நாடகமே நடந்துள்ளது. அன்று அதை அறியாமல் நான் கரூரில் போலீசாருக்கு நன்றியெல்லாம் கூறினேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இப்படி ஒரு விபத்து நடப்பதற்குக் காரணமான அறிவுறுத்தல்களைக் கொடுத்து, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? இவ்வளவு பெரிய துயரம் நடந்த பின், அதன் வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டான் என்று ஏளனமாகப் பேசினார்கள். அங்கு வந்த கூட்டத்திற்குத் தகுந்த பாதுகாப்பை போலீசார் கொடுத்தார்களா? என கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us