AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வியட்நாம் படகு விபத்து – 10 தமிழர்கள் மரணம் – வெளியான விவரம்

வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செந்தில்குமார், முருகபிரபு, ஸ்ரீதர், ஷேக், பாலாஜி, வினய குமார், ரவிசங்கர், சந்தோஷ்குமார், பாபு, அழகுராஜன் ஆகியோர் உயிரிழப்பு என ததகவல்கள் தெரிவிக்கின்றன

வியட்நாம் படகு விபத்து – 10 தமிழர்கள் மரணம் – வெளியான விவரம்
வியட்நாம் படகு விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jul 2026 21:26 PM IST

வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செந்தில்குமார், முருகபிரபு, ஸ்ரீதர், ஷேக், பாலாஜி, வினய குமார்; ரவிசங்கர், சந்தோஷ்குமார், பாபு, அழகுராஜன் ஆகியோர் உயிரிழப்பு என ததகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் 10 பேருடன், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கேரளத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர்.

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் மரணம்

வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஃபு குவோக் தீவு அருகே ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்திய சுற்றுலாப் பயணிகள் பலரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் திடீரென கவிழ்ந்தது. உள்ளூர் வியட்நாமிய அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்துக்கான முழு விவரங்களையும் துல்லியமான காரணத்தையும் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய…. அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

இந்தத் துயரச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 தமிழர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கேரளத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த வணிக செயல்பாட்டுக்காக தங்கள் பணியாளர்களை லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் பதிவு


இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.

இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

இதையும் படிக்க : “ஒரே அணியில் திமுக – தவெக”..? திருமாவளவன் வகுத்த வியூகம்.. மாணிக்கம் தாகூர் கொடுத்த புதிய விளக்கம்!!

இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

Follow Us