சத்தீஸ்கர் மாநிலத்தில் எண்டோஸ்கோபி கேமராவைப் பயன்படுத்திப் பல்கலைக்கழக வினாத்தாளைத் திருடி கசியவிட்ட கல்லூரிப் பேராசிரியர் மற்றும் 5 மாணவர்கள் உட்பட 6 பேரை ராய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு பூச்சியியல் தேர்வின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 36 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்தனர்.