இந்தியர்களை ஏற்றிச் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள், ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் தனித்தனி சம்பவங்களில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 22 இந்தியர்கள் இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில், எரிட்ரியா நாட்டின் கொடியுடன் சென்ற ‘M T Sibu 1’ என்ற எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல், ஆகஸ்ட் 20ஆம் தேதி ஏமன் கடற்கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.