இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய…. அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரூரில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியது இந்துக்களுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 11 : கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2026 அன்று தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்ற விஜய், ஜூலை 10, 2026 அன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்காண ஆணையை வழங்கினார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் திமுக மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரூரில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதற்கு அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிக்க : “புது அவதாரம் எடுத்த அண்ணாமலை!”.. பொள்ளாச்சியில் நாளை கூடும் “வி த லீடர்ஸ்” முதல் பிரம்மாண்ட மாநாடு!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன், நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து90340 மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு
“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. @imrajmohan அவர்களே!
நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத… pic.twitter.com/ePvYMSzMfZ
— Nainar Nagenthran (@NainarBJP) July 11, 2026
கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.
இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் முதல்வர் விஜய்யின் அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.