இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த எஸ்கே.26 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக தனுஷ் நடிக்கிறாரா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் DxV என்ற வாசகத்துடன் ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்திருப்பதுதான். அந்த போஸ்டரின் பின்னணி, விண்வெளி மற்றும் அறிவியல் புனைகதை உலகத்தை நினைவூட்டும் வகையில் இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. முன்னதாக, சிவகார்த்திகேயனின் 26வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.