முதல்வர் விஜய் வருகைக்கு தயாராகும் கரூர்.. பலத்த பாதுகாப்புடன் குவியும் தொண்டர்கள்!
இந்த அரங்கில் சுமார் 5,000 பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை முதலமைச்சர் விஜய் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, அவரது இந்த வருகை அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து இன்று காலை புறப்படும் முதலமைச்சர் விஜய், கரூரில் உள்ள ‘அட்லஸ் அரங்கம்’ பகுதியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
Follow Us
