AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பென்ஸ் படத்தில் நிறைவடைந்தது முக்கிய நடிகர்களின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

Ravi Mohan and Nivin Pauly has already wrapped | தமிழ் சினிமாவில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் பென்ஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முக்கிய நடிகர்கள் முடித்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பென்ஸ் படத்தில் நிறைவடைந்தது முக்கிய நடிகர்களின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்
பென்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jul 2026 16:09 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஹாலிவுட் சினிமாவில் இருக்கும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற முறையை தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான கைதி என்ற படம் தான் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் முதலாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மற்றும் லியோ ஆகியப் படங்களும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்சின் கீழ் ஒன்றுடன் ஒன்று இணைந்து வெளியானது. இந்தப் படங்கள் அனைத்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த லோகேஷ் சினிமட்டிக் யுனிவர்சின் அடுத்தப் படமாக தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் பென்ஸ். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் படம் பென்ஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

பென்ஸ் படத்தில் நிறைவடைந்தது முக்கிய நடிகர்களின் ஷூட்டிங்:

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ (BENZ) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகியோர் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளன; இதில் விரைவில் படமாக்கப்படவுள்ள ஒரு முக்கிய சண்டைக் காட்சியும் அடங்கும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதோடு, அதன் டீசரையும் படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அப்டேட் தற்போது இணையஹ்ட்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… படங்களில் அந்த உடை எனக்கு சௌகரியமாக இல்லை – நடிகை காஜல் அகர்வால்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சாய் பல்லவி குறித்து தவறாக பரவும் தகவல் – வைரலாகும் வீடியோ

Follow Us