ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!
OM Vs Jailer 2: தென்னிந்திய சினிமாவில் பிரபலம் மிக்க நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் கோலிவுட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை உறுதிசெய்துள்ளது.
நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் படம்தான் ஓம் (OM). இதில் தனுஷ் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் படத்தை இணைந்து தயாரித்துவருகிறார். இதில் தனுஷ் அதிரடி வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துவருகிறார். மேலும் தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடும் சாய் பல்லவி (Sai Pallavi), இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். இவர் இதுவரை எந்த படங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்ததில்லை, இதுவே முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது செம்மர கடத்தல் மற்றும் அதிலிருக்கும் அதிரடி சண்டைகள் தொடர்பான கதைக்களம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுவருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அந்த விதத்தில் தற்போது இப்படத்தில் பாலிவுட் முக்கிய நடிகர் இணைந்துள்ளாராம். மேலும் இப்படமானது ஜெயிலர் 2 படத்துடன் மோதாது, ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் அறிவிப்பின் காரணமாக ஓம் பட ரிலீஸ் தள்ளிவைப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை மறுக்கும் விதத்தில் படக்குழு மீண்டும் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசன் படத்தில் ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஓம் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்வது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
A strong addition to the world of #OM 🔥
The veteran #NaseeruddinShah on board the mega biggie. Coming to cinemas worldwide on October 16th 2026.@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905… pic.twitter.com/S3clQ2fCb2
— Wunderbar Films (@wunderbarfilms) July 9, 2026
ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை உறுதி செய்த தனுஷின் ஓம் படம் :
நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் 172வது படமாக உருவாகியுள்ளதுதான் ஜெயிலர் 2. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, அவருடன் பல்வேறு பான் இந்திய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன? வைரலாகும் தகவல்
இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு முன்பே, தனுஷின் ஓம் படம் அக்டோபர் 16ம் தேதியில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின் ஜெயிலர் 2 பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓம் படம் தள்ளிப்போகும் என்கூறப்பட்டது. ஆனால தற்போது வெளியிட்ட அறிவிப்பிலும் ஓம் படம் அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என படக்குழு உறுதியளித்துள்ளது.
ஓம் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் :
இப்படத்தில் நடிகர் நசிருதீன் ஷா, நெகட்டிவ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது இவர் நடிக்கும் 2வது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தி சினிமாவை கடந்து, ஹாலிவுட் மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நடிகர் தற்போது தனுஷின் ஓம் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



