AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த ரௌடி பேபி டான்ஸ்.. இணையத்தில் லீக்கானது ஓம் பட தனுஷ் – ஸ்ரீலீலா நடன போட்டோஸ்!

Dhanush Om Movie: தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக தயாராகிவருவதுதான் ஓம். இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் நிலையில், இதன் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில், தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

அடுத்த ரௌடி பேபி டான்ஸ்.. இணையத்தில் லீக்கானது ஓம் பட தனுஷ் – ஸ்ரீலீலா நடன போட்டோஸ்!
ஓம் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா நடனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Jun 2026 12:29 PM IST

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கிவரும் புது படம்தான் ஓம் (OM). இதில் தனுஷ் (Dhanush) அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருடன் ஸ்ரீலீலா (Sreeleela) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து நடித்துவருகிறார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தனுஷின் D55 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவந்தது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கியிருந்தது.

இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படம் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: திருமண பந்தத்தில் இணையப்போகும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. சிம்பிளாக முடிந்த நிச்சயம் – வைரலாகும் போட்டோஸ் இதோ!

இணையத்தில் கசிந்த தனுஷின் ஓம் பட பாடல் ஷூட்டிங் புகைப்படம்:

இந்த ஓம் படத்தில் சாய் அபயங்கரின் இசையமைப்பில், டான்ஸ் பாடல் இருக்கிறதாம். இதில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவருமே நடனமாடுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படத்தில் சாய் பல்லவி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இதில் தனுஷிற்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் ரௌடி பேபி பாடலை போலவே இப்படத்திலும் நடனமாடவைக்கும் பாடல் ஒன்று இருக்கிறதாம்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பட ஆரம்பகட்ட நடிகர்கள் தேர்வில் நானும் இருந்தேன் – ஆர்யா உடைத்த உண்மை!

அந்த பாடலில் தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடுகிறார்கள். இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடலை ஷூட்டிங் தொடர்பான புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ஓம் படத்தின் டைட்டில் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தனுஷின் இந்த் படமானது செம்மர கடத்தல் மற்றும் போலி அதிகாரி மற்றும் கடத்தல் காரர்கள் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இது ஒரு உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us