Arya: பொன்னியின் செல்வன் பட ஆரம்பகட்ட நடிகர்கள் தேர்வில் நானும் இருந்தேன் – ஆர்யா உடைத்த உண்மை!
Arya About Ponniyin Selvan Movie First Casting: நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் அனந்தன் காடு. இப்படத்தின் புரோமோஷன் பணிகளாக சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் ஆர்யா கலந்துகொண்டார். அதில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்ப தேர்வில் தானும் இருந்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்யா (Arya). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஸ்டர் எக்ஸ் (Mr X). இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா ராணுவ உளவாளியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின், வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் அனந்தன் காடு (Ananthan Kaadu). இதை மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் (Jiyen Krishnakumar) இயக்கியுள்ள நிலையில், விடுதலை போராட்டம் தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படமானது மலையாளம் மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஆர்யா, பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தின் ஆரம்பகால தேர்வில் தானும் இருந்ததாக தெரிவித்துளளார்.




இதையும் படிங்க: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!
பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஆர்யா சொன்ன உண்மையான தகவல்:
அந்த பேட்டியில் பேசும்போது ஆர்யா, “பொன்னியின் செல்வன் படத்தில் ஆரம்பகட்ட நடிகர்கள் தேர்வு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆந்த படத்திற்காக முதல் முதலில் தளபதி விஜய், மகேஷ் பாபு சார் மற்றும் நானும் அதில் இருந்தேன். ஆனால் 10 வருடத்திற்கு பின், இறுதியாக பொன்னியின் செல்வன் படம் தயாரிப்பிற்கு சென்றபோது, அதை இயக்குநர் மணிரத்னம் சார் முழுமையாக மாற்றிவிட்டார்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கெணத்த காணோம் படம் வெறும் காமெடி மட்டும் இல்ல… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
அனந்தன் காடு திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து ஆர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Here’s the official Tamil Trailer of #Ananthankaadu 💥
▶️ https://t.co/3SnzgYE1Tn@JiyenKrishna @vinod_offl@arya_offl @ministudiosllp @AJANEESHB @aditi1231 @stuntsaravanan @dopyuva @divomusicindia @RIAZtheboss @ParasRiazAhmed1@GokulamGopalan #Krishnamoorthy#BaijuGopalan…
— Arya (@arya_offl) June 18, 2026
அனந்தன் காடு படத்தில் நடிகர் ஆர்யா அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் விடுதலை போராளியாக நடித்துள்ளார். இதில் நடிகர்கள் நிகிலா விமல், ரெஜினா மற்றும் பல்வேறு மலையாள நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயார்க்கியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு படக்குழு ஏ சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.