AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arya: விடுதலை போராளியாக ஆர்யா.. வெளியானது அனந்தன் காடு பட அதிரடி ட்ரெய்லர்!

Ananthan Kaadu Trailer: கோலிவுட் சினிமாவில் அதிரடி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்யா. இவர் நீண்ட நாட்களுக்கு பின் மலையாளத்தில் நடித்துள்ள புதிய படம்தான் அனந்தன் காடு. இப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் விடுதலை போராட்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கும் நிலையில், இன்று (15/06/2026) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Arya: விடுதலை போராளியாக ஆர்யா.. வெளியானது அனந்தன் காடு பட அதிரடி ட்ரெய்லர்!
அனந்தன் காடு டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Jun 2026 20:10 PM IST

நடிகர் ஆர்யாவின் (Actor Arya) நடிப்பில் தொடந்து பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாளத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் அனந்தன் காடு (Ananthan Kaadu). இதை இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் (Jiyen Krishnakumar) இயக்க, முரளி கோபி எழுதியுள்ளார். இப்படமானது 89ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள் குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தில் ஆர்யா லீட் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் நடிகர்கள் நிகிலா விமல் (Nikhila Vimal), ரெஜினா, இந்திரன்ஸ், தேவா மோகன் மற்றும் முரளி கோபி போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, காந்தாரா பட புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். ஆர்யாவின் ஆக்ஷன் அதிரடி நடிப்பில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. D55 பட முக்கிய அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:

ஆர்யாவின் அனந்தன் காடு பட ட்ரெய்லர் எப்படி இருக்க:

இந்த அனந்தன் காடு படமானது முற்றிலும் அதிரடி மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது ஒரு காட்டில் வாழும் மக்களை கொன்று குவித்து. அந்த காட்டை சூறையாடும் நபர்களிடமிருந்து, அந்த காட்டை மீட்கும் நாயகனாக ஆர்யா நடித்துள்ளார். இதில் ஆர்யா தமிழனாகவே நடித்திருக்கிறார். தனது கிராம மக்களுக்காக போராடும், ஒரு விடுதலை வீரனாக ஆர்யா இதில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்… தனது குழந்தைகளுடன் முத்த மழையில் அஜித் குமார் – வைரலாகும் போட்டோஸ்

மேலும் இப்படத்தில் கருப்பு படத்தின் மூலம் பிரபலமான இந்திரன்ஸ் நெகடிவ் வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் இதில் நடிகை ரெஜினா, நிகிலா விமல் மற்றும் முரளி கோபி போன்ற பல்வேறு நபர்களும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர் இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் போராட்ட கதைக்களத்தில் உருவாகியிருப்பதாக தெரிகிறது.

அனந்தன் காடு படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த அனந்தன் காடு படமானது முழுக்க முழுக்க விடுதலை மற்றும் அரசியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் தரப்பு “ஏ” சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி இப்படத்தய் 18+ நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும். இப்படத்தில் அதிக ஆக்ஷன் மற்றும் அரசியல் கதைக்களம் இருக்கும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கமுடியும் என கூறப்படுகிறது.

Follow Us