சூர்யா 47 பட இயக்குநரை புகழ்ந்து பேசிய மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர்
Director Chidambaram | மஞ்சுமல் பாய்ஸ் என்ற படத்தை மலையாள சினிமாவில் இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சிதம்பரம். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யா 47 பட இயக்குநர் ஜித்து மாதவன் குறித்து புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சிதம்பரம். இவர் மலையாள சினிமாவில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தில் பெரும்பான்மையான கதாப்பாத்திரங்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவர்களாகவும் கதை கொடைக்கானலில் நடைபெறுவது போல காட்டப்பட்டிருந்த காரணத்தினாலேயும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் எளிதில் சென்று அடைந்தது. இந்தப் படம் கேரளாவில் மஞ்சுமல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுழா வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்வங்களை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இதன் காரணமாகவே படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் தற்போது இயக்கி உள்ள படம் பாலன் தி பாய். இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிதம்பரம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் ஜித்து மாதவன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இயக்குநர் ஜித்து மாதவனை புகழ்ந்து பேசிய இயக்குநர் சிதம்பரம்:
அக்காலகட்டத்தில், இயக்குனர் ஜித்து மாதவனிடம் படத்தின் கட்டமைப்பு, காட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த கதைக்களம் என அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான கதை வரைவு மற்றும் தெளிவான பார்வை இருந்தது. ஆவேஷம் மற்றும் ரோமாஞ்சம் படங்களுக்கு முன்பே அவர் பாலன்கதையை எழுதியிருந்தார்; அப்போதுதான் நாங்கள் இருவரும் இணைந்து அதில் பணியாற்றத் தொடங்கினோம்.
சூர்யா சார் நடிக்கும் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும், இந்தப் படத்தின் மீதான தனது ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் அவர் தொடர்ந்து தக்கவைத்திருந்தார். என்னைத் தொடர்புகொள்வதற்கும், நேரில் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவர் எப்போதும் இதற்கென நேரம் ஒதுக்கினார். படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாகவே, நாங்கள் அப்படத்தின் திரைக்கதையில் ஏறக்குறைய பத்து ட்ராஃப்ட்ஸ்களை முழுமையாகப் பரிசீலித்திருந்தோம் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Also Read… மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ஹபீபி படத்தை புகந்து பேசிய மாரி செல்வராஜ்
இணையத்தில் வைரலாகும் சிதம்பரம் பேச்சு:
Dir #Chidambaram about #Jithumadavan
– At that time, director Jithu Madhavan had a detailed story draft and a complete vision for the film, including its structure, scenes, and overall narrative.
– He had written #Balan before #Aavesham and Romancham, and that’s when we started… pic.twitter.com/2QaQQqKjEl
— Movie Tamil (@_MovieTamil) June 14, 2026
Also Read… அயோத்தி பட இயக்குநருடன் புது படத்தில் இணைந்ததை உறுதிசெய்த விஜய் ஆண்டனி!