AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Balan Movie: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் பாலன் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Balan The Boy Movie First Single: பிரபல மலையாள இயக்குநரான சிதம்பரத்தின் இயக்கத்தில் புதிதாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் பாலன் : தி பாய். இப்படமானது அதிரடி திரில்லர் மற்றும் கிரைம் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தாக்கோல் என்ற பாடலை இன்று (12/06/2026) படக்குழு வெளியிட்டுள்ளது.

Balan Movie: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் பாலன் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தக்கோல் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Jun 2026 20:42 PM IST

கடந்த 2024ம் ஆண்டில் மலையாள சினிமாவில் வெளியாகி தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் மஞ்சுமெல் பாய்ஸ் (Manjummel Boys). இப்படத்தை பிரபல இயக்குநர் சிதம்பரம் (Chidambaram) என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் “பாலன்: தி பாய்” (Balan: The Boy). இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் டோவினோ தாமஸ் (Tovino Thomas), முஹம்மத் ஜினான், கிரிஷ் ஏ.டி. பீன் ஆண்டனி, ஜீன் பவுல் லால், பார்சானா பலத்தின்கள் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படமானது அதிக எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுஷீன் ஷியாம் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து “தக்கோல்” என்ற முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கிடா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் ஜீவா – வெளியான அறிவிப்பு இதோ!

பாலன்: தி பாய் படத்தின் தாக்கோல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

பாலன்: திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் – சென்சார் அப்டேட் இதோ:

இந்த பாலன் படமானது உளவியல் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்த நிலையில், அதில் ஒரு சிறுவன் மற்றும் அவரின் அம்மா என இருவரை மட்டுமே மெயினாக காட்டப்பட்டிருந்தது. ஆனால் இதில் டோவினோ தாமஸின் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதால். இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ 16+ என்ற சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளாராம்.

இதையும் படிங்க: சியான் 63 படத்தில் இணைந்த கோமாளி பட நடிகை – வைரலாகும் போட்டோ

அந்த வகையில் இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது கிட்டத்தட்ட 2 மணிநேரமும் 28 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக தயாராகியுள்ளது. இப்படம் மலையாளம் மொழியில் மேனாக உருவாகியிருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

Follow Us