வளர்ச்சி என்பது வசூல் ரீதியாக அல்ல, கதை விஷயத்தில் இருக்க வேண்டும் – இயக்குநர் சிதம்பரம்
Director Chidambaram: மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிதம்பரம். மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படத்தை இயக்கியதன் காரணமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக மாறினார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொதுவால். அதன்படி இவர் இயக்குநராக அறிமுகம் ஆன படம் ஜான்.இ. மேன் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதன்படி இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கி இருந்தார். உண்மைக் கதையை மையமாக வைத்து சர்வைவர் த்ரில்லர் ஸ்டோடியாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தென்னிந்திய ரசிகர்களிடையே இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுளா வந்த நண்பர்கள் தடை செய்யப்பட்ட குனா கேவ் உள்ளே செல்கிறார்கள். அதில் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு நபர் டெவில்ஸ் கிட்சன் என்று அழைக்கபடும் படு குழிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்துவிடுகிறார். அவரை அவரது நண்பர்கள் எப்படி காப்பாற்றினர் என்பதே படத்தின் கதை. இந்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக மாறினார் சிதம்பரம். இந்த நிலையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




வளர்ச்சி என்பது வசூலில் அல்ல, கதையில் இருக்க வேண்டும்:
அதன்படி இயக்குநர் சிதம்பரம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெளியான பிறகு நான் நீண்ட நாட்களாக சும்மா இருந்தேன். நான் பதட்டமாக இருக்கிறேன், நட்சத்திர நடிகர்களுடன் பணியாற்றுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன, ஆனால் நான் அதற்குத் தயாராக இல்லை. அதனால்தான் நான் ‘பாலன்’ படத்தை செய்தேன், அது ஒரு சிறிய, அழகான படம். வளர்ச்சி என்பது வசூல் ரீதியாக அல்ல, கதை விஷயத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மறுத்துவிடுவேன்… பிரபல இயக்குநர் பேச்சு
இணையத்தில் கவனம் பெறும் சிதம்பரம் பேச்சு:
“After #ManjummelBoys got released i was sitting ideal for a long. I’m tensed & i got lot of options to do with Stars, but I’m not prepared for it🤞. That’s why I did #Balan, it’s small cute film❣️. Growth should be in Subject, not with BO👏”
– Chidambarampic.twitter.com/a4banlnvva— AmuthaBharathi (@CinemaWithAB) January 5, 2026
Also Read… பிக்பாஸ் ஜூலியின் திருமணம் எங்கு? எப்போது தெரியுமா? – இணையத்தில் கசிந்த தகவல்