Jana Nayagan: ‘ராவண மவன்டா’.. ரசிகர்கள் கொண்டாடும் ஜன நாயகன் பட 4வது பாடல் வெளியானது!
Raavana Mavandaa Song: இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் ஜன நாயகன் திரைப்படம். இந்த படமானது 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இந்த படத்தின் 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் ஹெச்.வினோத் (H.Vinoth) கூட்டணியில் அதிரடி அரசியல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படமானது தளபதி விஜய்யின் கடைசி படம் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக அவர் முழுமையாக தமிழக அரசியலில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. மேலும் இந்த படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் தளபதி விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju) , பாபி தியோல், நரேன், பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது அரசியல், பெண்கள் பாதுகாப்பு என ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த விதத்தில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆடியோ லான்ச் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான “ராவண மவன்டா” (Raavana Mavandaa) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: பிக்பாஸ் ஜூலியின் திருமணம் எங்கு? எப்போது தெரியுமா? – இணையத்தில் கசிந்த தகவல்
தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ராவண மவன்டா பாடல் பதிவு :
Vasanamaa ezhudhalaam avan kadha adhukkellaam mela..#RaavanaMavandaa is here 🧨
▶️ https://t.co/rCpcmabGU9#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju… pic.twitter.com/4lM87WI4Sp
— KVN Productions (@KvnProductions) January 2, 2026
ஜன நாயகன் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் அப்டேட் :
இந்த ஜன நாயகன் திரைப்படமானது தளபதி விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படம் தெலுங்கு பட ரீமேக் என கூறப்படும் நிலையில், இது 100 சதவீதம் தளபதி படம் என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இப்படமானது விஜய்யின் இறுதி படம் என்ற நிலையில், இதன் ரன் டைம் சுமார் 3 மணி நேரம் 2 நிமிடம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழா.. எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?
படம் மொத்தமாக 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என் கூறப்படும் நிலையில், கடைசி 20 நிமிடம் தளபதி பழைய படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.