AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்… மீண்டும் தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ்?

Love Insurance Kompany Movie Postponed: தமிழ் சினிமாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்ற நிலையில் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்… மீண்டும் தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ்?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Feb 2026 19:18 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். தொடர்ந்து இவர் இயக்குநராக இயக்கியப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்படி இவர் நாயகனாக அறிமுகமான லவ் டுடே படத்தில் இருந்து தொடர்ந்து ட்ராகன் மற்றும் டியூட் ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மூன்று படங்களும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹாட்ரிக் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லவ் டுடே படத்தினை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் படத்தில் கமிட்டாகி நடித்து இருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அதற்கு பின்னதாக உருவான ட்ராகன் மற்றும் டியூட் ஆகியப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.

மீண்டும் தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ்?

இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு பல முறை வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தொடர்ந்து ஒத்திவைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற மார்ச் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது படத்தின் வெளியீடு வருகின்ற ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read… சவுத் இந்தியன் குயின்.. இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி யாரு-னு தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரசிகர்களின் அன்பு.. திருமணத்துக்கு பெயர் வைத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!