Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழா.. எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: தென்னிந்திய சினிமாவில் உச்ச கதாநாயகனாக கலக்கிவருபவர் தளபதி விஜய். இவரின் கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றிருந்தது. அது எப்போது வெளியாகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது அரசியல் மற்றும் பெண் குழந்தைகள் குறித்து பாதுகாப்பு போன்ற அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக இவர் இரண்டாவதாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் திரைப்படமானது இந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு கடந்த 2025 டிசம்பர் 27ம் தேதியில் இந்த ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் (Jana Nayagan audio launch) மலேசியாவில் (Malaysia) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் படக்குழு அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ5 நிறுவனம் (Zee5) வாங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஜன நாயகன் பட ஆடியோ லான்ச் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ஒளிபரப்பாகும் நேரத்தை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் பார்ட் சூப்பர் ஹிட்.. 2026 கோடைக்காலத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு குறித்து அறிவிக்கப்பட்ட எக்ஸ் பதிவு :
Thalapathy vara variakkum, Voice ah kuduthu.. Nandu sindu thoguruthu..😌🔥
Thalapathy Thiruvizha #JanaNayaganAudioLaunch Premieres On Jan 4th 4:30 PM On ZEE5❤️#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss… pic.twitter.com/0KPuT85cPp
— ZEE5 Tamil (@ZEE5Tamil) January 2, 2026
இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் மாலை 4:30 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஜீ5 அப்பிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் :
தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் டிக்கெட் புக்கிங் வெளிநாடுகளில் சில மாதங்களுக்கு முன்னே தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 27ல் முதல் இந்தியாவிலும் தொடங்கியது. முதலில் கர்நாடகாவில் ஆரம்பமான நிலையில், கேரளாவிலும் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது..? எதில் பார்க்கலாம் தெரியுமா?
அந்த வகையில் இந்தி மற்றும் தமிழில் மட்டும் இன்னும் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் தொடங்கவில்லை. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசிற்கு பின் ஜன நாயகன் பட டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.