Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mari Selvaraj: அந்த படம் பார்த்தபோது என்னை உறையவைத்தது- மனம் திறந்த மாரி செல்வராஜ்!

Mari Selvaraj About Naangal Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல இணயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் மாரிசெல்வராஜ். இவரின் இயக்கத்தில் தொடர்ந்து மாற்றத்திற்கான கதைக்களத்தில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தன்னை மிகவும் பாதித்த படம் குறித்து மனம் திறந்துள்ளார். அது என்ன படம் என்பது குறித்து பார்க்கலாம்.

Mari Selvaraj: அந்த படம் பார்த்தபோது என்னை உறையவைத்தது- மனம் திறந்த மாரி செல்வராஜ்!
மாரி செல்வராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Jan 2026 21:28 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான “பரியேறும் பெருமாள்” (Pariyerum Perumal) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். தனது முதல் படத்திலே மிக பெரிய வரவேற்ப்பை பெற்று மக்களிடையே பிரபலமானார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன் (Bison). இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். கபடி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த் படத்திற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இப்படத்தை அடுத்ததாக புது படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பிசியாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நேர்காணலில் தன்னை அதிகம் பாதித்த படம் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த படம் வேறு எதுவும் இல்லை, “நாங்கள்” (Naangal) என்ற படம்தான். இதை இயக்குநர் ராம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2026 புத்தாண்டு ஸ்பெஷல்… அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பைசன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு :

நாங்கள் என்ற படம் குறித்து வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ் :

அந்த நேர்காணலில் பேசிய மாரி செல்வராஜ் ,”ஒருவொருத்தருக்கும் ஒரு படம் அவர்களை மிகவும் பாதிக்கும். அதில் எனக்கு நாங்கள் படம் ஒன்று. அது குறித்து இயக்குனர் ராம் சாரிடம் பேசினேன். அந்த படம் குறித்து எனக்கு நிறைய சொல்லமுடியால, சொல்ல தெரியவில்லை என்றே கூறலாம். மேலும் இந்த படம் இயக்குனரின் தனிப்பட்ட கதை என்றாலே அதிகம் யோசிப்போம். அதிலும் அந்த படத்தில் சிறப்பான காட்சி ஒன்று என்னை மிகவும் உறையவைத்துவிட்டது. அது அந்த படத்தின் கதை மட்டுமில்லாமல், அது எடுக்கப்பட்ட விதமே என்னை உறையவைத்தது.

இதையும் படிங்க: யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஒரு படத்தை உருவாக்குபவனாக இருக்குபோது, மற்றொரு இயக்குநர் ஒரு காட்சியை எடுத்தார் என்றால் அந்த இடத்தில் நாம் இருந்தாலே எப்படி இருக்குமோ அதைப்போல உணரமுடியும். நமக்கு நடந்த ஒரு சம்பவத்தை நாம எடுக்கும்போது, அது நடந்த இடத்திற்கே நாம் சென்றுவிடுவோம். அந்த வகையில் நாங்கள் படத்தின் ஒரு கடைசியில் அதை இயக்குநர் எப்படி எடுத்திருப்பாரு என நான் வியந்து பார்தேன்” என அவரை அதில் பேசியிருந்தார். தொடர்ந்து அந்த படத்தைப் பற்றி புகழ்ந்துபேசியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.