AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆமா யார் ஹீரோ? வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ!

Glimpse of KH x RK Reunion - Tamil | ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருந்த அந்த தருணம் தற்போது வந்துள்ளது. ஆம் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆமா யார் ஹீரோ? வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ!
கமல் ஹாசன் & ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Feb 2026 12:28 PM IST

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட இரண்டு நடிகர்களின் படங்களுக்கு இடையே அதிக அளவில் போட்டி நிலவுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜியின் காலத்திற்கு பிறகு அதிக அளவில் போட்டி நிலவியது என்னமோ நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படஙக்ளுக்குதான். இவர்கள் இருவரும் நடிப்பு மற்றும் படங்களின் தேர்வு என்பது முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும் ஆனாலும் இவர்களின் படங்கள் மற்றும் ரசிகர்களிடையே தொடர்ந்து போட்டி என்பது நிலவிக்கொண்டே இருக்கும். என்னதான் நடிகர்களுக்கு இடையே அவர்களின் படங்களுக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வந்தாலும் அவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விசயமாகும். அதன்படி சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்த நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் ஆசை தற்போது நிறைவேற உள்ளது.

அதன்படி நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிப்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் 17-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லெஜண்ட்ரி நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் புரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்தப் புரோமோ வீடியோவைப் பார்க்கும் போது இது முழுக்க முழுக்க இயக்குநர் நெல்சனின் பாணில் உருவாகும் படம் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே நாயகன்களாகவும் டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இந்தப் படம் இருக்கும் என்பதும் உறுதியாகி உள்ளது.

Also Read… Toxic Movie: யாஷின் டாக்சிக் பட டீசர் ரிலீஸ் எப்போது?- படக்குழு வெளியிட்ட அப்டேட் இதோ!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நிவின் பாலியின் பிரதிச்சாயா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட மோகன்லால்