AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்தின் இறுதிப் படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்? வைரலாகும் தகவல்

Rajinikanth Final Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவர் இறுதியாக நடிக்க உள்ள படம் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் இறுதிப் படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்? வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Feb 2026 18:21 PM IST

உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். 75-வயது ஆகும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தனது தனித்துவமான ஸ்டைலுக்காகவும் நடிப்பிற்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வு இன்றி அடுத்தடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு கூலி படம் வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை டீ ஏஜிங் மூலம் இளைமையாக காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தப் படத்தில் நடிக்கத் தொடங்கினார் ரஜினிகாந்த்.

அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்திற்காக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் 174-வது படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார். இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் இறுதியாக நடிக்க உள்ள படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் இறுதிப் படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்?

75 வயதிலும் ஓய்வு இன்றி நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனது வரிசையில் அடுத்தடுத்து 3 படங்களை வைத்துள்ளார். இந்தப் படங்களின் பணிகள் முடிவடைந்ததும் தனது இறுதிப் படத்தினை தனது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பின் கீழ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம் படத்திலிருந்து வெளியானது ராப் பேட்டில் லிரிக்கல் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஹேப்பி ராஜ் படத்திலிருந்து ஆடினே இருப்பேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!