ரீ ரிலீஸில் போட்டிப் போடும் விஜய் – அஜித் படங்கள்!
Ghilli and Thunivu Movie Re-release clash: தமிழ் சினிமாவில் நடிகர்களின் படங்கள் போட்டியாக வெளியாவது வழக்கமாக இருந்தாலும் ரீ ரிலீஸில் போட்டிப் போடுவது புதிதான ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது ரீ ரிலீஸில் அஜித் விஜய் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் (MGR) மற்றும் சிவாஜி (Sivaji Ganeshan) காலத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகள் நிலவி வருகின்றது. நடிகர்கள் இடையே போட்டி இருக்கின்றதோ இல்லையோ அவர்களின் ரசிகர்களிடையே தொடர்ந்து போட்டி நிலவுவது வழக்கமாக உள்ளது. அதன்படி அடுத்தடுத்த தலைமுறைகளில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து விஜய் (Thalapathy Vijay) மற்றும் அஜித் குமார் (Actor Ajith Kumar) என இவர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கமாக உள்ளது. அதன்படி இந்த நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் தொடர்ந்து ரசிகர்கள் போட்டிப் போட்டு அவர்களுக்கு பிடித்த நாயகன்களின் படங்களை வெற்றியடையச் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். முன்பு எல்லாம் இணையதள பயன்பாடு அதிக அளவில் இல்லாத போது படம் வெளியாகும் போது திரையரங்குகளில் தான் போட்டி இருக்கும்.
ஆனால் இணையதள பயன்பாடு மக்களிடையே அதிகரித்தப் பிறகு தங்களது நடிகர்களுக்காக ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டுக்கொண்டது வலக்கமாக உள்ளது. இந்த நிலையில் முன்பு எல்லாம் புதிதாக வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது ரீ ரிலீஸிலும் தங்களது ரசிகர்களிடையே போட்டியை தூண்டும் விதமாக படத்தை வெளியிடுகின்றனர்.




ரீ ரிலீஸில் போட்டிப் போடும் விஜய் – அஜித் படங்கள்:
இந்த நிலையில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் படங்கள் ரீ ரிலீஸில் தற்போது போட்டிப் போட உள்ளது. அதன்படி வருகின்ற 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் நடிகர் விஜயின் கில்லி படமும் அஜித் குமாரின் துணிவு படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். மேலும் இந்தப் படங்களின் போட்டியை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்து படம் வெளியாகும் போதே தெரியவரும்.
Also Read… குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி… வைரலாகும் த்ரிஷம் 3 படத்தின் நியூ போஸ்டர்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Theri & Mankatha Re-release clash missed !!
But we’re gonna have #Ghilli & #Thunivu Re-release clash on Feb 20th😀🔥 pic.twitter.com/qvKKxG3SHy
— AmuthaBharathi (@CinemaWithAB) February 16, 2026
Also Read… Siruthai Siva: அஜித் குமாருடன் அடுத்த படமா? – ரகசியத்தை உடைத்த சிறுத்தை சிவா!