AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் iQOO 16.. முழு விவரம் இதோ!

iQOO 16 Price in India | iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தனது iQOO 16 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் iQOO 16.. முழு விவரம் இதோ!
iQOO 16
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Nov 2026 23:29 PM IST

iQOO நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தனது புதிய படைப்பான iQOO 16 ஸ்மார்ட்போனை (iQOO 16 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்த iQOO 16 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

iQOO 16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் நிறுவனம்

iQOO நிறுவனம் தனது அடுத்த மாடலான iQOO 16 ஸ்மார்ட்போனை அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெமரி சிப் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை காரணமாக, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தான், iQOO நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.1 லட்சத்திற்கு அறிமுகமாகும் ஐபோன் 18?.. வெளியான முக்கிய தகவல்!

iQOO 16 ஸ்மார்ட்போன் : விலை பட்டியல்

சீனாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 5,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.86,000 ஆகும். மெமரி சிப் உள்ளிட்டவற்றின் காரணமாக iQOO நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, iQOO 16 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.89,999 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்.. ஊழியர்களை எச்சரித்த பிரபல நிறுவனம்!

iQOO 16 : இதர சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த iQOO 16 ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் 2K சாம்சங் எம்16 LTPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூன்று ரியர் கேமரா செட் அப் அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது OIS உடன் 50 மெகாபிக்சல் மைன் சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 8,400 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 40 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us