AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை! ரகசிய தகவல்களைப் பகிர வேண்டாம் – வெப் லாகின் மூலம் மோசடி அபாயம்

MHA Warning On Cyber Attack: வாட்ஸ்அப் மூலம் ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) வசதியைத் தவறாகப் பயன்படுத்தி பயனர்களின் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை! ரகசிய தகவல்களைப் பகிர வேண்டாம் – வெப் லாகின் மூலம் மோசடி அபாயம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Nov 2026 17:15 PM IST

நவம்பர் 23, 2026: வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) வசதியைத் தவறாகப் பயன்படுத்தி பயனர்களின் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU), வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் வெப் மூலம் கணக்குகளை முடக்காமல் அணுக வாய்ப்பு

வாட்ஸ்அப் வெப் வசதியில் ஒருமுறை உள்நுழைந்த கணக்கு, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயனரின் அனுமதியின்றி மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பொது கணினிகள் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தும் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் கணக்கை லாக்-இன் செய்துவிட்டு வெளியேறாமல் இருந்தால், அந்தக் கணக்கை மற்றவர்கள் அணுகும் அபாயம் உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள், தொடர்பு எண்கள், குழு உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களைச் சைபர் குற்றவாளிகள் திருடக்கூடும்.

மேலும், தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஃபிஷிங் (Phishing), சமூகப் பொறியியல் (Social Engineering) உள்ளிட்ட பல்வேறு இணையவழி மோசடிகளிலும் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம், சைபர் கஃபே கணினிகளில் பயன்படுத்த வேண்டாம்

அலுவலகக் கணினிகள், பொது இடங்களில் உள்ள கணினிகள், சைபர் கஃபேக்கள், ஹோட்டல்களின் வணிக மையங்களில் உள்ள கணினிகள் மற்றும் மற்றவர்கள் எளிதில் அணுகக்கூடிய சாதனங்களில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதலீட்டுத் தரவரிசையில் சீனாவை நெருங்கிய இந்தியா… பிரதமர் மோடி தலைமைத்துவத்துக்கு 2வது இடம்!

மேலும், வாட்ஸ்அப் வெப் கணக்கைத் தொடர்ந்து லாக்-இன் நிலையில் வைத்திருக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்ததும் முறையாக லாக்-அவுட் செய்ய வேண்டும். பிரவுசர் டேப் (Browser Tab) அல்லது விண்டோவை மூடுவது மட்டுமே வாட்ஸ்அப் வெப் கணக்கிலிருந்து வெளியேறுவதற்குச் சமமாகாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்காக்னிட்டோ மோடில் பயன்படுத்தலாமா?

தவிர்க்க முடியாத சூழலில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த வேண்டியிருந்தால், நம்பகமான கணினிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் இன்காக்னிட்டோ (Incognito) அல்லது பிரைவேட் பிரவுசிங் (Private Browsing) வசதியைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்!

அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமான ரகசியத் தகவல்கள் கையாளப்படும் நிறுவனங்களில், அலுவலகக் கணினிகள் வழியாக வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரைவேட் பிரவுசிங் வசதி என்பது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கடலுக்கு அடியில் அதிவேக பயணம்.. பல கி.மீ. ஆழத்தில் பிரம்மாண்ட ரயில் நிலையம்.. மும்பை டு அகமதாபாத் இடையே பணிகள் தீவிரம்!

எனவே, வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்திய பிறகு முறையாக லாக்-அவுட் செய்வதுடன், தங்களது டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us