AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிசம்பரில் அமலுக்கு வருகிறதா EPFO 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!

EPFO 3.0 From December 2026 | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டிசம்பர் முதல் அந்த அம்சம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பரில் அமலுக்கு வருகிறதா EPFO 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Nov 2026 17:55 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் அசத்தல் அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. இந்த அமைச்சகத்தின் மூலம் ஊழியர்கள் ஏராளமான பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான், ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ வழிவகை செய்துள்ளது. அதாவது, இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சத்தை அறிமுகம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் அறிமுகம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ 3.0 : சுலபமாகவும், விரைவாகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்

தற்போதுள்ள நிலவரப்படி ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதள மூலம் விண்ணப்பித்து பண வங்கி கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு, பிஎஃப் பணம் வங்கி கணக்குக்கு வர குறைந்தது 3 நாட்கள் முதல் சுமார் 15 நாட்கள் வரை தேவைப்படும். இவ்வாறு, பொதுமக்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதையும் படிங்க : வங்கி கணக்கில் எடுக்காமல் இருக்கும் பணம்.. ஆர்பிஐ அசத்தல் அம்சம்!

இபிஎஃப்ஓ 3.0 : விரைவாக, எளிதாக பிஎஃப் பணத்தை எடுக்கலாம்

இந்த நிலையில் தான், பிஎஃப் பணத்தை விரைவாகவும், எளிதாகவும் எடுக்கும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 அம்சம் அறிமுகம் செய்யப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது பிஎஃப் பணத்தை விரைவாக யுபிஐ (UPI – Unified Payment Interface) அல்லது ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : தங்கத்தில் கலப்படம்.. வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு ஜிஜேசி எச்சரிக்கை!

டிசம்பர் முதல் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதிய அம்சம் எப்போது அமலுக்கு வரும் என ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இபிஎஃப்ஓ 3.0 அம்சம் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், இதன் காரணமாக டிசம்பர் மாதம் முதல் இந்த அம்சம் அமலுக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us