AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை.. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு, இடைத்தேர்தல் குறித்து விவாதம்..

CM Vijay Meeting: தற்போது கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற அரசியல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை.. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு, இடைத்தேர்தல் குறித்து விவாதம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Nov 2026 17:49 PM IST

நவம்பர் 23, 2026: தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் அரசுக்கு அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அதே நேரத்தில், கூட்டணியில் இடம்பெறாத இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இதனால், இந்தக் கட்சிகளின் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம் என்ற அரசியல் விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே, திமுக மற்றும் அதிமுக தரப்பிலிருந்தும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் எதிர்காலம் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் தவெக ஆட்சி கவிழும் – திமுக, அதிமுக தலைவர்கள் கருத்து!

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடந்த சில நாட்களாகத் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் கவிழும் என்றும், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் பேசி வருகின்றனர்.

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக வெற்றிக் கழக அரசைக் கவிழ்க்க அதிமுக எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், அந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

24 முதல் 30 எம்எல்ஏக்களை இழுக்கத் திட்டமா?

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 24 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க சில அரசியல் தரப்புகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் ஆளுங்கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும்! உச்சநீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

மேலும், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான இளையராஜா, முஸ்தபா ஆகியோரும் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் புகார்களை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தவெக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய விஜய்!

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையூரில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் தற்போதைய அரசியல் சூழல், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க: பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. இனி காலை 7 மணி முதல் தொடக்கம்..

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – ஆலோசனையில் முக்கிய இடம்!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற அரசியல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்வது எப்படி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது, அரசின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow Us