AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நூலக புத்தக கொள்முதலில் 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு.. உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பகீர் தகவல்!

Library Books Procurement Irregularities : தமிழகத்தில் உள்ள நூலகங்களில் உள்ள புத்தகங்கள் கொள் முதல் செய்யப்பட்டதில் 3 ஆண்டுகளாக முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர் .

நூலக புத்தக கொள்முதலில் 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு.. உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பகீர் தகவல்!
நூல்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Nov 2026 14:00 PM IST

தமிழகத்தில் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் 3 ஆண்டுகளாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில், மேலும் இரு பதிப்பகங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்யப்பட்ட மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தப் புத்தகக் கொள்முதலில் பெரிய முறைகேடு நிகழ்ந்து இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புத்தக கொள்முதல் முறைகேடு மனு மீதான விசாரணை

இது தொடர்பாக கடந்த நவம்பர் 7- ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், இந்த மனு மீதான விசாரணை லட்சுமி நாராயணன் முன்பு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக டன் கணக்கில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!

3 ஆண்டுகளாக புத்தக கொள்முதலில் முறைகேடு

இதில், சிக்மா, வித்யா ஆகிய இரு பதிப்பகங்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்துக்கு ரூ. 1.74 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது, அதற்கான வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவித்தால் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும். பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இதுபோன்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்த நீதிபதி

இந்த புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. கடந்த 2024- ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையே பின்பற்றி இருந்தால், இந்த முறைகேட்டை தவிர்த்திருக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பரந்தாமனின் வாக்குமூலத்தை பதிவு செய்யப்படும் என்ற போலீசின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை புதன்கிழமை ( நவம்பர் 25- ஆம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க: அதிரடி காட்டும் DRI! புதுக்கோட்டையில் 1.75 கிலோ தங்கம் பறிமுதல்.. ஒரு மாதத்தில் ரூ.285 கோடி கடத்தல் பொருள்கள் கைப்பற்றல்!

Follow Us