AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதுப் பட தயாரிப்பாளருடன் விஷாலுக்கு பிரச்சனையா? வைரலாகும் தகவல்

Vishal is in a dispute with the producer of the film | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் தயாரிப்பாளருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுப் பட தயாரிப்பாளருடன் விஷாலுக்கு பிரச்சனையா? வைரலாகும் தகவல்
விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 13:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால் (Vishal). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவ் அருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மகுடம். இந்தப் படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்தது மட்டும் இன்றி இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மேலும் மகுடம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் உருவாகி வரும் படம் புருஷன். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஷால் நடிக்கும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

புதுப் பட தயாரிப்பாளருடன் விஷாலுக்கு பிரச்சனையா?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, விஷால், லீடர் பட இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார். இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிப்பதாக இருந்தது. முதலில் இந்தப் படப்பிடிப்பை டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக, லலித் குமார் இந்தப் படத்திலிருந்து விலகுவதாகத் தெரிகிறது.

எனவே, படக்குழுவினர் தற்போது வேறொரு தயாரிப்பு நிறுவனத்தைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், இயக்குனர் பி.எஸ். மித்ரன் திரைக்கதை பணிகளை முடித்ததும், வி.எஃப்.எஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரும்புத்திரை 2 திரைப்படத்தின் பணிகளை விஷால் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… தொடர் வெற்றி… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா? சினிமா வட்டாரங்களில் பரவும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் வாரம் முழுவதும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஜேசன்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் புரோமோ வீடியோ

Follow Us