AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓ.எம் படத்திலிருந்து வெளியானது ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

OM Movie Original Soundtrack Out Now | நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஓ.எம். இந்தப் படத்தில் இருந்து ஒரிஜினல் சவுட்ன் ட்ராக் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஓ.எம் படத்திலிருந்து வெளியானது ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஓ.எம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 12:09 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து கர மற்றும் ஓ.எம் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த ஓ.எம் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் கடந்த 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படம் இதுவரை 75 கோடிகளைக் கடந்து வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஓ.எம் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் மம்முட்டி வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ள நிலையில் ஸ்ரீலீலா நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஓ.எம் படத்திலிருந்து வெளியானது ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்:

அதன்படி இந்த ஓ.எம் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த ஓ.எம் படத்தில் இருந்து ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சவுண்ட் ட்ராக்கிற்காக பல நாள் காத்திருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… இரண்டு வானம் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

ஓ.எம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… டபுள் எவிக்‌ஷன் கன்ஃபார்ம்… பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் யார்? வைரலாகும் தகவல்

Follow Us