நட்புக்காக படத்தின் முதல் சாய்ஸ் சரத்குமார் கிடையாது – தயாரிப்பாளர் விளக்கம்
Producer AM Ratham talks about Natpukkaga movie | தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து வெளியான படம் நட்புக்காக. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக முதல் சாய்ஸ் சரத்குமார் இல்லை என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல உறவுகளை மையமாக வைத்து பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நட்பை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆண் மற்றும் ஆண் நட்பு, ஆண் மற்றும் பெண் நட்பு, பெண் மற்றும் பெண் நட்பு என பல பாணிகளில் இந்த தமிழ் சினிமாவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நட்புக்காக. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (KS Ravikumar) இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை ஏ. எம். ஜோதி கிருஷ்ணா எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி 1998-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி 28 ஆண்டுகளைக் கடந்த இந்த நட்புக்காக படத்தில் நாயகனாக சரத்குமார் நடித்து இருந்த நிலையில் அவர் முதல் சாய்ஸ் இல்லை என்றும் அவருக்கு முன்பு வேறு ஒரு நடிகர்தான் நடிக்க இருந்ததாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.




நட்புக்காக படத்தின் முதல் சாய்ஸ் சரத்குமார் கிடையாது:
அந்தப் பேட்டியில் ஏ.எம்.ரத்னம் பேசியதாவது, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய நட்புக்காக திரைப்படத்தின் கதையை, ஏ.எம். ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா, தனது 17-வது வயதில், 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எழுதினார். தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் இடையிலான புகழ்பெற்ற நட்புறவால் ஈர்க்கப்பட்ட ஜோதி கிருஷ்ணா, இந்தத் திரைப்படத்தின் கதையை வெறும் ஒரே மணி நேரத்தில் உருவாக்கினார். நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இருவருக்கு இடையே, ஒரு பெண் எவ்வாறு பிளவை ஏற்படுத்துகிறாள் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். இளம் எழுத்தாளரின் முதிர்ச்சியான கதை சொல்லும் திறன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஏ.எம். ரத்னம் ஆகிய இருவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முதலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சிவாஜி கணேசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவருக்கு முன்பணமும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அக்காலகட்டத்தில் சரத்குமார் மற்றும் பிரபு ஆகியோருடன் இணைந்து நடிப்பதில் இருந்த சிக்கல்கள் மற்றும் கால அட்டவணை தொடர்பான நடைமுறைச் சிரமங்களால், சிவாஜி கணேசனால் இந்தப் படத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், படத்தையே கைவிடலாமா என்று தயாரிப்பு தரப்பினர் யோசித்தனர். ஆனால், கே.எஸ். ரவிக்குமாரின் ஆலோசனையின் பேரில், அந்த கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமானார். இறுதியில், நட்புக்காக திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Also Read… ரிலீஸ் தேதியை முடிவு செய்தது மோகன்லாலின் அதிமனோகரம் படம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Natpukkaga Was Originally Planned with Sivaji Ganesan in the Lead Role😮. – A.M.Ratham
The story of K.S. Ravikumar’s #Natpukkaga, produced by A.M. Rathnam, was written by Rathnam’s son Jyothi Krishna when he was just 17 years old and studying in Class 12.
Inspired by the legendary friendship between Tenali Raman and Krishnadevaraya, Jyothi Krishna developed the storyline in just an hour. The plot revolved around how a woman creates a rift between two close friends😯. Both K.S. Ravikumar and A.M. Rathnam were impressed by the young writer’s mature storytelling👌.
Interestingly, #SivajiGanesan was initially signed for the lead role, and an advance payment had been made to him. However, due to combination and scheduling issues involving Rival Sarathkumar and Prabhu at that time, Sivaji Ganesan eventually could not be part of the project😟.
The makers even considered dropping the film. But following K.S. Ravikumar’s suggestion, Vijayakumar stepped into the role, and #Natpukkaga went on to become a massive success🤝.
The film was later remade in Telugu with Chiranjeevi in the lead role.
Adding another interesting connection, Jyothi Krishna also participated in the story discussions for Rajinikanth’s blockbuster #Padayappa 😳🔥.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 22, 2026
Also Read… இரண்டு வானம் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்