எல்கே சுதீஷ் வீட்டு பங்க்ஷன்.. கோபத்துடன் வெளியேறிய தேவயானி.. நடந்தது என்ன?
Devayani Walks Out: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்துவந்தவர் தேவியானி. இவர் சமீபத்தில் அரசியல்வாதியான எல்கே சுதீஷ் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது திடீரென அவர் கோபத்துடன் வெளியேறிய நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் மக்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் கவர்ந்த நாயகியாக இருந்துவந்தவர் தேவியானி ராஜகுமாரன் (Devayani Rajakumaran). இவர் தமிழில் சரத்குமார் (Sarathkumar) முதல் முதல்வர் விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட பல டபுள் கதாநாயகி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குநரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சில ஆண்டுகளாக சினிமாவில் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. 1994ம் ஆண்டில் மலையாள சினிமாவில் வெளியான கின்னரிப்புழோரம் என்ற படத்தின் மூலம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துவந்தார். இந்நிலையில் தற்போது இவரின் 2வது மகள் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.
அண்மையில் நடிகை தேவியானி, தனது மகள்களுடன் தமிழக அரசியல்வாதியான எல்கே சுதீஷ் (L.K. Sudhish) வீட்டு திருமண வரவேற்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பங்கேற்காமல், கோபத்துடன் அவர், தனது மகள்களுடன் வெளியேறியிருந்தார். இதற்கான காரணம் பற்றி விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ரசிக்கிற கண்ணான கண்மணியே.. 2 நாட்கள் முடிவில் உலகமெங்கும் தனுஷின் ஓ.எம் படத்தின் வசூல் இதுதான் – அறிவிப்பு!
தேவயானி திருமண வரவேற்பிலிருந்து வெளியேறியதாக பரவும் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
தேவியானி திடீரென அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற என்ன காரணம்:
அரசியல்வாதி எல்கே சுதீஷ், வீட்டு திருமண வரவேற்ப்பில் முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதில் தனது மகள்களுடன் நடிகை தேவயானியும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் மேடையில் மணமக்களை வாழ்த்த அவர் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த நபர்கள் யாருமே அவரை சரியாக மதிக்கவில்லை மற்றும் சரியாக நடந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மேடையிலிருந்து அவர் இறங்கியிருந்தார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 பிளாக்பஸ்டர்.. எடிட்டர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நெல்சன் திலீப்குமார்!
இதன் பிறகு அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற நினைத்த நிலையில், சரியாக திமுக துணை தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பாதுகாவலர்களுடன் வருகை தந்தார். இந்த கூட்டத்தில் தேவயானி சிக்கிய நிலையில், உதயநிதியின் பாதுகாவலர்களிடையே கோபமுடன் கத்தியிருந்தார். அதில் பாதுகாவலர் ஒருவர், தேவியானியின் மகளை தள்ளியதாக கூறப்படுகிறது. அதனால் அவர், உதயநிதி ஸ்டாலின் முன்பே கோபத்துடன் கத்திருந்தாராம். உடனடியாக தனது மகள்கள் இருவரையும் கூப்பிட்டு அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் வீடியோக்களும் இணையத்தில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.