AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசின் இலவச சிலிண்டர் திட்டம் – யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்

Tamil Nadu Free Gas Cylinder Scheme: தவெக ஆட்சியமைத்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24, 2026 அன்று சட்டமன்றத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும் எண அறிவித்தார். இந்த திட்டம் 2027 பொங்கலை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் இலவச சிலிண்டர் திட்டம் – யாருக்கெல்லாம் கிடைக்கும்?  வெளியான முக்கிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Nov 2026 18:58 PM IST

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தவெக (TVK) அளித்த தேர்தல் வாக்குறுதியில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவெக ஆட்சியமைத்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24, 2026 அன்று சட்டமன்றத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும் எண அறிவித்தார். இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.4000 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த திட்டம் வருகிற 2027 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து 2027 பொங்கல் முதல் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் என கூறப்படும் நிலையில் இதற்கான பயனர்களை தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : பயிரை மேய்ந்த வேலி! 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது.. ஈரோட்டில் பரபரப்பு!

விலையில்லா 3 சிலிண்டர்கள் யாருக்கு கிடைக்கும்?

இந்த நிலையில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 பெறும் குடும்பங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள குடும்பங்களின் பட்டியலையும் தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இறுதிப் பட்டியல் தயாரானதும் தகுதியான குடும்பங்களின் விவரங்கள் குறித்து தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் வருகிற 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வழக்கம் போல சிலிண்டர் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather report: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… கார்த்திகை தீபமன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தவெகவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 24, 2026 அன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110-ன்கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், பேசியதாவது, தேர்தல் களத்தில் எங்களின் தாய்மார்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றி வருகிறது.

திட்டத்தின்படி, சிலிண்டரை வழக்கம்போல் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்; அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாகச் செலுத்தப்படும். சுமார் 1.30 கோடி குடும்பங்களைச் சென்றடைய உள்ள இந்தத் திட்டத்தை 2027 பொங்கல் பண்டிகையின்போது தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இறுதிப் பயனாளிகள் பட்டியல் தயாரானதும் தகுதியான குடும்பங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும் என தெரிவித்தார்.

Follow Us