AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அதிரடி முடிவு!!

Tamil Nadu Govt Files Review Petition: திருப்பரங்குன்றம் மலைத் தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரித் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவு தொடர்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அதிரடி முடிவு!!
திருப்பரங்குன்றம் தீபத் தூண்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2026 14:07 PM IST

மதுரை, நவ.22: திருப்பரங்குன்றம் மலை தீபத் தூண் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் தர்கா அருகே உள்ள மலைத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஆன்லைன் வாயிலாகத் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. வழக்கின் விரிவான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: “ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ்?”.. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நீதிபதி ஆவேசம்!

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு:

திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் இடைக்காலமாகத் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், தீபம் ஏற்றுவதற்குப் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றும், யார் எத்தனை பேர் செல்ல வேண்டும் என்பதை இந்தியத் தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியரே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள்:

தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கின் முழுமையான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இதையும் படிக்க: “300 கிலோ எடை, 9 அடி நீளம்!”.. கடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை.. வீட்டை விட்டு வெளியே வந்தவரை கடித்ததால் பரபரப்பு!!

சீராய்வு மனு மற்றும் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு:

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு, தீபம் ஏற்றும் நாளுக்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் அடுத்தகட்டப் பட்டியலிடல் மற்றும் விசாரணையே இந்த விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Follow Us