AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1 லட்சத்திற்கு அறிமுகமாகும் ஐபோன் 18?.. வெளியான முக்கிய தகவல்!

Apple iPhone 18 | ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடல் ஐபோன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஐபோன் 18 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது ரூ.1 லட்சட்த்திற்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1 லட்சத்திற்கு அறிமுகமாகும் ஐபோன் 18?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Nov 2026 12:50 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடைசியாக ஆப்பிள் தனது 18 மாடல் ஐபோன்களை (iPhone 18 Smartphones) அறிமுகம் செய்த நிலையில், வழக்கமான 18 மாடல் ஐபோன்களை (iPhone 18) அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் தனது அடுத்த மாடல் ஐபோனை எப்போது அறிமுகம் செய்யும், அது என்ன என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், ஆப்பிள் தனது 18 மாடல் ஐபோனை ரூ.1 லட்சத்திற்கு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் 18 : ப்ரோ மாடல் போன்களை அறிமுகம் செய்த நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக ஐபோன், ஐபோன் பிளஸ், ஐபோன் ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். ஆனால், கடைசி முறை முற்றிலும் வித்தியாசமாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதாவது, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் டுயோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஆனால், வழக்கமாக அறிமுகம் செய்யும் மாடல்களை அறிமுகம் செய்யவில்லை. இந்த நிலையில் தான், ஆப்பிள் 18 சீரீஸில் வழக்கமான மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க : இந்தியாவில் உருவெடுத்துள்ள புதிய மின்சார கட்டண மோசடி.. எச்சரிக்கும் ஆர்பிஐ!

ஐபோன் 18 இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும்?

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியது. அந்த வகையில், தற்போது அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 18 போன்களுக்கும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஐபோன்களின் ஆரம்ப விலையில் 100 டாலர்கள் வரை உயர்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, 888 அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக 999 அமெரிக்க டாலர்களாக உயர்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரூட்டு இனி ஈசி.. ஆப்பிள் மேப்ஸ் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்ஸ்.. என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கு?

ரூ.99,900 ஆக விலை உயர்த்தப்பட்ட ஐபோன் 17

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 இந்தியாவில் வெறும் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2026 செப்டம்பர் மாதத்தில் அந்த ஐபோன் ரூ.99,900 ஆக விலை உயர்த்தப்பட்டது . மெமரி சிப் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலையஒ உயர்த்தி வரும் நிலையில், அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us