AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவில் உருவெடுத்துள்ள புதிய மின்சார கட்டண மோசடி.. எச்சரிக்கும் ஆர்பிஐ!

SBI Exposes Rising Electricity Bill Scam | இந்தியாவில் சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உருவெடுத்துள்ள புதிய மின்சார கட்டண மோசடி குறித்து ஆர்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உருவெடுத்துள்ள புதிய மின்சார கட்டண மோசடி.. எச்சரிக்கும் ஆர்பிஐ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Nov 2026 11:41 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு (Technology Development) ஏற்ப நூதன மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருங்கின்றன. குறிப்பாக இந்தியாவில் சைபர் கிரை மோசடிகளின் (Cyber Crime Scams) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மின்சார கட்டணம் செலுத்துவது தொடர்பான புதிய மோசடி ஒன்று உருவாகியுள்ளது. அது குறித்து எஸ்பிஐ (SBI – State Bank Of India) வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி எச்சரிக்கும் அந்த புதிய வகை மின்சார கட்டணத்தை செலுத்தும் மோசடி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் கிரைம்

இந்தியாவில் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்டிகை கால மோசடிகள், சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் என பல பெயர்களில் இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. விழிப்புணர்வுடன் இருக்கும் பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால், ஒருசிலர் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் மின்சார கட்டணம் தொடர்பான மோசடி குறித்து எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : வெறும் ரூ.51 மட்டுமே.. ஒரு மாத ரீசார்ஜ் இலவசம்.. பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர்

வீடியோ வெளியிட்ட எஸ்பிஐ வங்கி

இந்த நிலையில் தான், இந்த மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் எஸ்பிஐ வங்கி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், தற்போது அரங்கேறி வரும் மின்சார கட்டண மோசடி தொடர்பான விரிவான தகவல்களை பகிர்ந்துள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக செயல்படுவார்கள் என்பதால், எஸ்பிஐ இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : கூகுளுக்கு போட்டி.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!

மின்சார கட்டண மோசடி எப்படி நடைபெறுகிறது?

இந்த மோசடியில் பாதிக்கப்படும் நபருக்கு முதலில் ஒரு போன் கால் வருகிறது. அதில் தொடர்புக்கொண்டு பேசும் மோசடிக்காரர், அந்த நபரின் மின்சார கட்டணம் நிலுவையில் உள்ளதாக கூறுகிறார். குறிப்பாக மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கூறுகிறார். உடனடியாக கட்டணம் செலுத்தவில்லை என்றால் சேவை நிறுத்தம் செய்யப்படும் என எச்சரிக்கிறார். பின்னர் அந்த கட்டணத்தை செலுத்த ஒரு லிங்கையும் அனுப்புகிறார். அதன் மூலம் பொதுமக்கள் பணத்தை செலுத்த முயற்சி செய்யும் பட்சத்தில் மொத்த பணத்தையும் மோசடிக்காரர்கள் திருடி விடுகின்றனர்.

இவ்வாறு தான் இந்த மோசடி சம்பவம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

Follow Us