AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. இவற்றை பின்பற்றுங்கள்!

How to Avoid UPI and ATM Fraud | தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், அது தொடர்பான மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைன் வங்கி கணக்கு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என பார்க்கலாம்.

வங்கி பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. இவற்றை பின்பற்றுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Nov 2026 13:17 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான், வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் பேங்கிங் மோசடியில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழங்கியுள்ள அறிவுரைகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக படிக்கலாம்.

இந்த தவறுகளை செய்யவே கூடாது

  1. வங்கி கணக்கு எண், ஏடிஎம் (ATM – Automated Teller Machine), ரகசிய எண், ஓடிபி (OTP – One Time Password), சிசிவி, யுபிஐ (UPI – Unified Payment Interface) உள்ளிட்ட எண்களை யாரிடமும் பகிரக்கூடாது.
  2. வங்கி அதிகாரிகள் என கூறி மொபைல் போனில் தொடர்புக் கொள்பவர்களிடம் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.
  3. உங்கள் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.
  4. பரிசு, சலுகை, லாட்டரி வென்றாத வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

இதையும் படிங்க : எல் நினோ எதிரொலி.. பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RBI வட்டி விகிதத்தை உயர்த்தலாம்!

வங்கி பண பரிவர்த்தனைகளை அவ்வப்போது சரிப்பார்க்க வேண்டும்

  1. உங்களது வங்கி கணக்கில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை அவ்வப்போது சரிப்பார்க்க வேண்டும்.
  2. அறிமுகம் இல்லாத நபர்கள், மொபைல் எண்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
  3. கூகுள் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களில் இருக்கும் போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம்.
  4. அறிமுகம் இல்லாத நபர்கள் கூறும், உங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது நீங்கள்  பயன்படுத்தாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூறினால் செய்யாதீர்கள்.

இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டம் முதிர்ச்சி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

பணம் பெற யுபிஐ பின் அவசியம் இல்லை

  1. யுபிஐ-ஐ பொருத்தவரை ஒருவருக்கு பணம் அனுப்ப தான் பின் கட்டாயம், பணம் பெற அல்ல. எனவே, உங்களுக்கு பணம் அனுப்ப யாரேனும் பின் கேட்டால் மறுத்துவிடுங்கள்.
  2. தெரியாத நபர்களுக்கு யுபிஐ-ல் பணம் அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  3. தெரியாத, காரணம் இல்லாமல் வரும் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய கூடாது.
  4. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளில் முதலீடு குறித்து வரும் செய்திகளை நம்பி முதலீடு செய்யக் கூடாது.

Follow Us