இந்த ஆட்சியை அப்படியே விட்டால் தானாகவே கவிழ்ந்துவிடும் – டிடிவி தினகரன் விமர்சனம்!
கோவை விமான நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும், இந்த ஆட்சியை அப்படியே விட்டால் தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் விமர்சித்தார் தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலத்திலிருந்து சினிமா மாநிலமாக மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், விஜய்யை புரட்சித்தலைவருடன் ஒப்பிடுவதற்குத் தகுதி இல்லை என்றார். சினிமாவில் ஹீரோவாக நடித்த விஜய், நிஜத்தில் வில்லன் என அவரே கூறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும், தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சர்ச்சைகள் குறித்துப் பேசிய அவர், ஆட்சியில் ஒழுக்கம் குறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்த தினகரன், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதே நியாயம் என்றும், ஜெயலலிதா ஆட்சி அமைய அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.